முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!
முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தடை விதிக்கப்பட்ட போதை பொருட்களான குட்கா மற்றும் புகையிலை போன்றவற்றை லஞ்ச தொகை பெற்றுக்கொண்டு அதை விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் பதினொரு பேரின் மீது வழக்கு போடப்பட்டது.
இது குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ தரப்பினர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் அனுமதிக் கேட்டு கடிதம் எழுதியது.
இந்த அனுமதிக் கடிதம் இன்னும் கிடைக்கமால் இருக்கிறது. அதாவது இந்த குட்கா வழக்கில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்க மறுத்து வருகிறார்.
இதனால், சிபிஐ தரப்பினர் இன்று நடந்த விசாரணையில் நீதிமன்றத்திடம் இன்னும் சில நாட்கள் கால அவகாசம் கேட்டனர். எனவே, இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் பதினொன்றாம் தேதி அன்று தள்ளி வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இதோடு பதினோராவது முறையாக இந்த வழக்கில் சிபிஐ கால அவகாசம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.