“சூழ்” நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

Photo of author

By Parthipan K

சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி வருகிறது. இந்தவகையில் 2019’ம் ஆண்டிற்கான விருது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 23 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாவல்கள் பிரிவில் தமிழ், தெலுங்கு, அசாமி, மணிப்புரி இந்த நான்கு மொழிகளுக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய “சூழ்” நாவலுக்கு விருது கிடைத்துள்ளது.

கரிசல் மண்ணின் விவசாயம் மற்றும் கால நிலைகள்,  விவசாயிகளின் அனுபவங்கள் ஆகியவற்றை கிராம நடையில் வெளிப்படுத்தியிருந்தது “சூழ்” நாவல்.

“ஆன் ஏரா ஆப் டார்க்னெஸ்” புத்தகத்திற்காக கேரளாவை சேர்ந்த எம்.பி சசி தரூருக்கு விருது கிடைத்துள்ளது.