தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் உண்டாகும் நாள்!

0
65
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் உண்டாகும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் நன்மை கிடைக்கும். அதேசமயம் மாலையில் பகை உணர் யோக ஸ்தானத்திற்கு சந்திர பகவான் வருவதால் உற்சாகம் உண்டாகும்.

உத்தியோகம் சிறப்பாக அமையும். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு உற்சாகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் தீரும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்பு வருவதற்கு இருந்து வந்த காலதாமதங்கள் விலகும். மூத்த வயதைச் சேர்ந்தவர்கள் ஆன்மீக நாட்டம் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

author avatar
CineDesk