தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!

0
83
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். நிதி இன்று நன்றாக உள்ளது. கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை உள்ளது. ஆனால் சில நேரங்களில் சில பிரச்சினைகள் வரலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் வேலை பளு கூறலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் எந்தவித குழப்பமும் இல்லை.

அலுவலகத்தில் உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் கொடி கட்டி பறப்பார்கள் குடும்ப நிர்வாகத்தில். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் நடக்கும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல்நலம் சரியாக இருக்க மாற்று மருத்துவத்தை அணுக முயற்சிப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk