லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? இந்தப் பொருட்களை சுத்தமாக வைத்திருந்தாலே போதும்!

0
91

லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? இந்தப் பொருட்களை சுத்தமாக வைத்திருந்தாலே போதும்!

லட்சுமி கடாட்சம் தரும் அஞ்சரைப்பெட்டி:ஒரு சில தினமும் வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். ஒரு சிலர் செவ்வாய் வெள்ளி போன்ற குறிப்பிட்ட தினங்களில் விளக்கேற்றி வழிபடுவார்கள்.

இறைவனுக்கு பூஜை எப்படி செய்வது பூஜை அறையை எப்படி சுத்தம் செய்வது. சுவாமிக்கு என்ன நிவேதனம் செய்வது, என்பதை பற்றிய சிந்தனை முழுவதுமாக இருக்கும். பண்டிகை நாளுக்கு முன்தினம் வீட்டை சுத்தம் செய்து விடுவோம். அவ்வாறு ஒரு நல்ல நாள் கிழமையில் மற்ற எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தக்கூடிய நாம் நம்முடைய சமையலறையில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.

சமையலறை:குறிப்பாக சமையலறையில் இருக்கக்கூடிய உப்பு ஜாடி, புளி ஜாடி, அஞ்சரை பெட்டி, அரிசி அளக்க பயன்படுத்தும் ஆழாக்கு, படி, அரைப்படி, முறம் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். ஜாடியில், அஞ்சரை பெட்டியில் எல்லாம் மளிகை ஜாமான்கள் இருந்தாலும் அதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு சுத்தமாக கழுவி காயவைத்து அதன் பின்பு அதில் பொருட்களை நிரப்பி வைக்க வேண்டும்.

உப்பு ஜாடி:அதன் பிறகு சமையல் மேடையை துடைத்து சுத்தம் செய்து அந்த அடுப்புக்கு மேல் பக்கத்தில் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, பிள்ளையார் சுழி மற்றும் லாபம் என்று எழுத வேண்டும். மஞ்சளை தண்ணீரில் கரைத்து அதைத் தொட்டு லாபம் என்று எழுதலாம். அப்படி இல்லை என்றால் தனலாபம் என்று கூட எழுதி வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.

சமையலறையில் வைத்திருக்கக் கூடிய சிறிய உரல், அம்மிக்கல் இருக்க வேண்டும். உரல், அம்மிக்கல்பயன்படுத்துவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை என்றால் இந்த சிறிய உரலுக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைப்பது சிறப்பான பலனை அளிக்கும்.

அம்மிக்கல்: சமையலறை அலமாரியை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். சமையலறையில் இருக்கும் பாத்திரங்கள் மளிகை ஜாமான்கள் கொட்டி வைத்திருக்கும் டப்பாக்கள் அனைத்தும் எண்ணெய் பிசுக்கோடு அசுத்தமாக இருக்கவே கூடாது. பூஜை அறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சமையலறையும் சுத்தமாக இருந்தால் தான் வீட்டில் லட்சுமி கடாட்சத்தில் நிறைந்திருக்கும்.

author avatar
Parthipan K