தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் இனிமைகள் அதிகரிக்கும் நாள்!

Photo of author

By CineDesk

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் இனிமைகள் அதிகரிக்கும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் இனிமைகள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அனுகூலமாக செயல்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக அமையும். அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றலாம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கவனமாக செயல்படுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அருமையாக அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.