தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருக்கும் குழப்பங்கள் குறையும் நாள்!

Photo of author

By Selvarani

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருக்கும் குழப்பங்கள் குறையும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருக்கும் குழப்பங்கள் குறையும் நாள். ஏனென்றால் கடந்த இரண்டு நாட்களாகவே சந்திராஷ்டமம் நடந்து கொண்டிருந்ததால் குழப்ப நிலையில் இருந்தீர்கள். இப்பொழுது குழப்பமில்லாமல் தெளிவாக இருப்பீர்கள். நிதி நிலைமை நீங்கள் எதிர்பார்க்கும் படி கிடைக்கும்.

கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்வு பெறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நீடிக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். கூட்டாளிகள் அனுபவமிக்க ஆலோசனைகளை வழங்குவார்கள். கொடுக்கல் வாங்கல் எந்த ஒரு குழப்பமும் இல்லை.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மனக்குழப்பும் இன்றி செயல்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்களுக்கு வெற்றிகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.