தசை வலி குறுக்கு வலி இருக்கா? அப்போ இதை மட்டும் தேயுங்க!

0
149

தசை வலி குறுக்கு வலி இருக்கா? அப்போ இதை மட்டும் தேயுங்க! 

தசை வலி என்பது உடல் உழைப்பினால் அல்லது அதிகப்படியான உடல் உறுப்புக்களின் பயன்பாட்டின் விளைவினால் அல்லது தசை குழுவினால் அடிக்கடி ஏற்படக்கூடிய மிக பொதுவான வலியாகும்.

இது கடுமையான அல்லது இயற்கையிலே நாள்பட்ட வலியாகவும் இருக்கலாம். தசை வலியின் அறிகுறிகள் அதன் முதல் நிலையில் தசையில் வலியினை உண்டாக்கும் காரணத்தை பொறுத்தது.

தசை வலியின் மிக பொதுவான காரணங்கள் சோர்வு, மன அழுத்தம், தவறான உடல் நிலை பயன்பாடுகள், காயங்கள் மற்றும் நேய் தொற்று உள்ளிட்டவை ஆகும்.

தசை வலியானது பொதுவாக ஒரு சில நாட்களுக்குள் தானாகவே குணமடைய கூடும். எனினும், நீண்டகால தசை வலியானது ஒரு அடிப்படை உடல் நல கோளாறின் அடையாளமாக இருக்கலாம். இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

சாதாரணமாக ஏற்படக்கூடிய தசை வலி மற்றும் குறுக்கு வலியை சரி செய்யக்கூடிய எளிமையான வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

1. இதற்கு முதலில் 3 பூண்டு பற்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டில் ஏராளமான நன்மைகள் உள்ளன.  இது வாயு பிடிப்பினால் ஏற்படும் தசை வலியை குறைக்கும். இதில் உள்ள கார்ஜலின் தசை வலியை குறைக்கக்கூடிய தன்மை கொண்டது.

2. அடுத்து ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

4. தேங்காய் எண்ணெய்

3 பல் பூண்டு கால் துண்டு இஞ்சி ஆகியவற்றை நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இதில் தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் அளவு சேர்த்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அப்போதுதான் பூண்டு இஞ்சி ஆகியவற்றின் தன்மைகள் தேங்காய் எண்ணெயுடன் நன்றாக சேரும்.

இது ஒரு பேஸ்ட் பதத்தில் இருக்கும். இதை சிறிது சிறிதாக எடுத்து தசை வலி உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் சற்று அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும். இதனால் தசைவலியானது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இது உடனடி வைத்திய முறைக்கு ஏற்றது. நீண்ட நாட்கள் இந்த கலவையை வைத்து பயன்படுத்த வேண்டும் எனில் அடுப்பை மிதமான தீயில் வைத்து சூடு செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் எடுத்து அந்த இடத்தில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.