பாராட்டுகளைப் பெற்ற சாய்பல்லவியின் கார்கி… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
223

பாராட்டுகளைப் பெற்ற சாய்பல்லவியின் கார்கி… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.அதன் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு ஓரளவு அறிமுகமானார். இதன் பிறகு அதே 2008 ஆண்டில் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலமாக திரையுலகில் மிகவும் பிரபலமானார். அந்த படத்தின் வெற்றி காரணமாக அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த விராட பர்வம் திரைப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் கார்கி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய நிறுவனம் சார்பாக வெளியிட்டார். ஜூலை 15 ஆம் தேதி வெளியான் இந்த திரைப்படம் தற்போது ஆகஸ்ட் 12 ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் மூன்று மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இந்த அறிவிப்பை சாய்பல்லவி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Previous article”டி 20 உலகக்கோப்பை தொடரில் இவர் கண்டிப்பா இருக்கணும்….” ரவி சாஸ்திரி பரிந்துரைக்கும் இளம் வீரர்!
Next article‘இந்தி படத்தையாவது விட்டுடலாம்னு நெனச்சேன்…’ அமீர்கான் படத்தை ரிலீஸ் செய்யும் காரணத்தை சொன்ன உதய்