மகனை மீட்டெடுத்தோருக்கு அறிவித்தபடி ரூ.1 கோடி வழங்குகிறார் சைதை துரைசாமி!

0
507
#image_title

மகனை மீட்டெடுத்தோருக்கு அறிவித்தபடி ரூ.1 கோடி வழங்குகிறார் சைதை துரைசாமி!

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி.

சட்லஜ் நதியில் மாயமான தனது மகனின் உடலை மீட்டெடுப்போருக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவித்த நிலையில் தற்போது அதனை வழங்குவதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

இமாச்சல் பிரதேசம் சட்லஜ் நதிக்கரையில் கார் கவிழ்ந்த விபத்தில் வெற்றி துரைசாமி மாயமாகி இருந்தார். தொடர்ந்ததற்கான மீட்பு பணிகள் நடைபெற்ற வந்தன. பின்னர் வெற்றி துரைசாமி குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கப்படாத நிலையில் அவரது தந்தை சைதை துரைசாமி தனது மகனை மீட்டு தருவோருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

தற்போது 8 நாட்களுக்குப் பிறகு கார் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பாறைக்கு அடியில் இருந்து வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் மாலையில் உடல் தகனம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே வெற்றி துரைசாமி உடலை கண்டறிந்து மீட்டு கொடுத்த ஸ்கூபா நீச்சல் வீரருக்கு ரூபாய் ஒரு கோடி அளிக்கப்படும் என சைதை துரைசாமி தெரிவித்ததாக இமாச்சல பிரதேசம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Previous articleமக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..!
Next articleசில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!