சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
190
#image_title

சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பருவமழை கொட்டி தீர்த்துவிட்டது. புது வருடம் தொடங்கிய முதல் ஒரு வாரம் பெரியளவில் மழைப்பொழிவு இல்லை என்றாலும்… பொங்கல் பண்டிகை நெருங்கும் தருணத்தில் மழை கொட்டி தீர்த்தது.

அதன் பின்னர் மெல்ல மெல்ல மழை அளவு குறைந்து குளிர் அதிகரிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பனிப்பொழிவு குறைவாகத் தான் இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் வாட்டி வதக்கும் கோடை காலம் ஆரம்பித்து விடும்.

ஆனால் பெரும்பாலான இடங்களில் இப்பொழுதே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது… இதனால் மீண்டும் மழைப்பொழிவு எப்பொழுது.. என்று மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அப்டேட் ஒன்றை தெரிவித்து இருக்கின்றது. இன்னும் சில மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.