தென்னிந்திய சினிமாவில் நடித்துவரும் சாக்ஷி அகர்வால் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார். மார்க்கெட்டிங் துறையில் முதல் முதலில் பணிபுரிந்து வந்த சாக்ஷி பின்னர் பகுதி நேரமாக நடிப்பில் ஈடுபட்டுவந்தார். அப்படியே மாடலிங் துறையில் நுழைந்த அவர் மொத்தமாக மார்க்கெட்டிங் சிலையை விட்டு விலகி சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்து விட்டார்.
நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். அட்லியின் ராஜா ராணி திரைப்படத்தில் இவர் நடித்திருக்கும் காட்சி மறக்க முடியாதது. பின்னர் யோகன், திருட்டு விசிடி, ஆதியன், க க க போ, காலா, விசுவாசம், டெடி, சின்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் நிறைய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதில் சில படங்களில் கதாநாயகி கதாபாத்திரத்திலும் மற்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சாக்ஷி அகர்வால் நடித்து வருகின்றார். இத்தகைய நிலையில் அன்றாடம் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
மேலும், ஜிம்முக்கு சென்று உடலை பிட்டாக வைத்துக் கொள்ளும் சாக்ஷி தான், ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யும் வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது அவர் கருப்பு நிற டீசர்ட் அணிந்து கவர்ச்சி தூக்கலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CVmHym_PhpD/?utm_medium=copy_link