டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் சலார் திரைப்படம்!!? வேறு தேதியை தேடும் மற்ற ஹீரோக்கள்!!!

0
32
#image_title

டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் சலார் திரைப்படம்!!? வேறு தேதியை தேடும் மற்ற ஹீரோக்கள்!!!

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் இன்று(செப்டம்பர்28) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இது தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து சலார் திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என்று கிட்டதட்ட உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அதே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த மற்ற படங்களின் நிலைமை என்னவாகும் என்று கவலையில் மற்ற திரைப்படங்களின் படக்குழுவினர் உள்ளனர்.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படம் உருவாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள சலார் திரைப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

சலார் திரைப்படத்தில் நடிகர் பிருத்திவிராஜ், நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் ஜகபதி பாபு, நடிகர் சரண் சக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ரவி பாஸ்ரர் இசையமைத்துள்ளார். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சலார் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த சலார் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சலார் திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 22ம் தேதி நடிகர் நானி நடிப்பில் ஹாய் நன்னா, நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் சைந்தவ், சுதீர் பாபு அவர்களின் ஹரோம் ஹரா, நடிகர் நிதின் நடிப்பில் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் ஆகிய திரைப்படங்கள் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று நீண்ட நாட்களுக்கு அறிவித்து விட்டது.

ஆனால் தற்பொழுது சலார் திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என்று கிட்டதட்ட உறுதியாகி விட்டது. இதனால் டிசம்பர் 22ம் தேதி சலார் திரைப்படம் வெளியாகும் பட்சத்தில் திரையரங்குகள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பு அனைத்தும் சலார் திரைப்படத்தின் மீது தான் இருக்கும். இதனால் அந்நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட திரைப்படங்களின் வெளியீட்டு தேதியை மாற்றி வைக்க அந்தந்த படக்குழுக்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

பெரிய பெரிய திரைப்படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைப்பது தற்பொழுது சகஜமாகி விட்டது. ஆனால் இதனால் ஏற்கனவே ரிலீஸ்க்கு திட்டமிட்டு வைத்துள்ள திரைப்படங்கள் பல சங்கடங்களை சந்திப்பதும் சகஜமாகி விட்டது.