தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்றானது உலக நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது.இரண்டாம் அலையின் தாக்கத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளன.இந்நிலையில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக சமூக விலகல் மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதே நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவதும் தீவிரப்படுத்தபட்டு வருகிறது. அதே நேரத்தில் தற்போதுள்ள தடுப்பூசிகள் குறித்து [பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருவதால் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனையடுத்து தடுப்பூசி செலுத்தி கொள்ள உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதே நேரத்தில் சில நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறி வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சியில் தடுப்பூசிகள் பல கண்டறியப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனமும் இந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து மருத்துவர் குழு அறிவுரையின் பேரில் அனைவரும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவர முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் பலரும் தாங்களாகவே விரும்பி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் மட்டும் தடுப்பூசி செலுத்துவதை தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர். இதனையடுத்து, சில நிறுவனங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தாத தங்கள் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடிக்க போவதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்த ஊழியர்களின் சிகிச்சைக்கு ஏறக்குறைய 37 லட்சம் ரூபாய் செலவாகிறது என்பதால் இந்த செலவை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாறு அபராதம் விதிக்கப்படுவதாக டெல்டா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.