சும்மா இருப்பது ஒரு சிலருக்கு பிடிக்கும். ஒரு சிலரால் சும்மா இருக்கவே முடியாது. வடிவேலு நகைச்சுவையில் சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா என கூறுவது போல் இங்கு ஒரு வாலிபர் சும்மா இருப்பதையே வேலையாக கொண்டு லட்சகணக்கில் சம்பாதித்து வருகிறார். அவர் எப்படி அதை செய்கிறார் என பார்க்கலாம்.
டோக்கியோ நகரில் உள்ள ஒரு நபர் தான் ஷோஜி மோரிமொட்டோ வேலை செய்த நிறுவனத்தால் வேலை யில் இருந்து நிறுத்தப்பட்டார் அதன் பின் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஜப்பானில் பொதுவாக உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் அது தனிமைதான். அதை மையமாக கொண்டு தான் அவர் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்.
அவர் எப்படி சம்பாதித்து இருப்பார் என்ற குழப்பம் அனைவர்க்கும் இருக்கும். அவர் தன்னை வாடகைக்கு விட்டுள்ளார். அதற்கு rental do nothing என்று பெயர். இவரை வாடகைக்கு எடுக்கும் நபருடன் இவர் ஒரு நண்பனை போல இருப்பார். அவருடன் பேசலாம் அவர் பேசும் அனைத்தையும் கேட்பார். வாடகைக்கு எடுக்கும் முன் என்ன காரணத்திற்காக வாடகைக்கு எடுக்கிறார்கள் என்ற காரணத்தையும் கேடு கொண்டு அவர்களுடன் சும்மா இருப்பார். இதை ஒரு வேலையாக கொண்டு கடந்த ஆண்டு மட்டும் 69 லட்சம் சம்பாதித்துள்ளார். இதில் ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள கூடாது. இப்படித்தான் சும்மா இருந்து கொண்டே லட்சகணக்கில் சம்பாதித்துள்ளார் இவர்.