4 மடங்கு சம்பளம் கொடுங்க! இவர்கள் இல்லாமல் என்ன செய்வது? தவிக்கும் தலைநகர்!

Photo of author

By Parthipan K

தலைநகர் டெல்லி கொரோனாவை சமாளிக்க முடியாமல் அம்மாநில அரசு திணறி வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பு தலைநகர் டெல்லியில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அடுத்த மாதம் இறுதியில் ஐந்தரை இலட்சம் படுக்கை வசதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவைப்படும் என்று சுகாதாரத்துறை அமைப்பு ஒருபுறம் தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் டெல்லியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவர்களின் எண்ணிக்கையும், செவிலியர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கான காரணமாக கூறப்படுவதாவது,

டெல்லியில் வசிக்கும் மக்களை தாண்டி மருத்துவர்களும் நர்ஸுகளும் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் அவர்களைத் கொரோனா தாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த அச்சம் காரணமாகவும், தங்களது குடும்பங்கள் கொரோனா அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அழுத்தம் கொடுப்பதாலும் பல தனியார்துறை மருத்துவர்கள் தங்களது பணியில் இருந்து விலகிக் கொள்கின்றனர்.

அதேபோல் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் பல மருத்துவமனைகள் கொரோனா வார்டாக மாற்றப்படும் சமயத்தில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்கள் பணியில் இருந்து நின்று விடுவதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு மீண்டும் பணிக்கு வர வேண்டுகோள் விடுத்த போது, பணிக்கு வரவேண்டுமெனில் கூடுதலாக சம்பளம் கேட்பதாகவும் அதாவது அவர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து நான்கு மடங்கு வரை உயர்த்தி கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காக டெல்லி உயர் மட்ட அமைச்சர்கள் குழு பல ஆலோசனைகளை நடத்தி வந்தது. அதில் தற்போது நர்சிங் பள்ளிகளில் பயிற்சி பெற்று வரும் மாணவிகளை இந்தப் பணிகளில் ஈடுபடுத்தலாம் எனவும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் இருந்து மருத்துவர், செவிலியர்களை உதவிக்கு அழைக்கலாம் எனவும் பல்வேறு ஆலோசனைகள் தொடர்ந்து டெல்லி மாநில அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அத்தனை ஆலோசனைகளையும், அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்திய நாட்டு பாதிப்பு முற்றிலும் நீங்கி நாடு கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.