மாதம் ரூ.215900/- ஊதியம்.. TRAI ஆணையத்தில் வேலை! விண்ணப்பம் செய்ய இன்று இறுதி நாள்!

0
125
#image_title

மாதம் ரூ.215900/- ஊதியம்.. TRAI ஆணையத்தில் வேலை! விண்ணப்பம் செய்ய இன்று இறுதி நாள்!

நாட்டின் தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRAI) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள Joint Advisor பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் இன்று அதாவது 08-09-2023 வரை தபால் வழியாக வரவேற்க படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)

காலிப்பணியிடங்கள்: Joint Advisor பணிக்கு பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் CA,Any Degree,LLB,Master Degree
இதில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,23,100/- முதல் 2,15,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

Joint Advisor பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.trai.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இன்று அதாவது 08-09-2023 அஞ்சல் வழியாக அவற்றை அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன?
Next articleராணுவ பயிற்சி பள்ளிகளில் ஆசிரியர் பணி! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 10 கடைசி நாள்!