IRCTC- யில் மாதம் 1 லட்சம் வரை சம்பளம்!! இதோ விண்ணப்பிக்கும் முறை இதுதான் கடைசி நாள்! 

Photo of author

By Rupa

IRCTC- யில் மாதம் 1 லட்சம் வரை சம்பளம்!! இதோ விண்ணப்பிக்கும் முறை இதுதான் கடைசி நாள்!

IRCTC இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தற்பொழுது அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.IRCTC யின் பிரதிநிதித்துவ படி குரூப் ஜென்ரல் மேனஜேர் GGM(E8)/GM(E7)பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறியுள்ளனர். இதனின் காலி பணியிடம் ஒன்று மட்டுமே உள்ள நிலையில், விண்ணப்பதாரர் ரயில்வேயில் குரூப் ‘A’ சேவையில் இருத்தல் கட்டாயம் என தெரிவித்துள்னர்.

மேற்கொண்டு தங்களின் படிவத்தை ஸ்கேன் செய்து குறிப்பிட்ட தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.வரவேற்கப்படும் விண்ணப்பங்கள் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ஆய்வு செய்து தேர்வு செய்யப்படும்.

தகுதி:

ரயில்வேயில் குரூப் ஏ சேவையில் இருத்தல் வேண்டும்.

ஐடியில் இருப்பவர்களின் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகிறது.

இந்திய ரயில்வேயில் வணிகத்துறையில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 55

விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.11.2023

எப்படி விண்ணப்பிப்பது:

IRCTC ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வை இணையதளத்தில் இருந்து வேலை வாய்ப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் கேட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்பு கடந்த மூன்று வருடத்தின் விஜிலென்ஸ் வரலாறு மற்றும் ஏ ஆர் க்ளியரன்ஸ்வுடன் ரயில்வே வாரியத்திற்கு அனுப்ப வேண்டும்.

பின்பு இதனை ஸ்கேன் செய்து @irctc.com. என்ற மின்னஞ்சலுக்கும்அனுப்பலாம்.