பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த தேசிய விளையாட்டு போட்டிகள்!!! தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தங்கம் வென்று அசத்தல்!!!

0
39
#image_title
பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த தேசிய விளையாட்டு போட்டிகள்!!! வெள்ளத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தங்கம் வென்று அசத்தல்!!!
பிரதமர் மோடி அவர்கள் நேற்று(அக்டோபர்26) 37வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கிய வைத்தார். இதில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி அவர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோவாவில் நேற்று(அக்டோபர்26) தொடங்கியது. 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் தொடங்கவும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 37வது தேசிய விளையாட்டு போட்டிகளை கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவா மாநிலத்தின் முதல்வர் பிரமோத்சாவந்த், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தக்கூர், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடவுள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து ராட்சத பலூன் ஒன்றில் பறந்து வந்த வீராங்கனை ஒருவர் தேசிய விளையாட்டு போட்டிக்கான ஜோதியை இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்சிங் மற்றும் அலைச்சறுக்கு வீராங்கனை காத்யா கொய்லோ அவர்களிடம் வழங்கினர். அதன் பின்னர் தேசிய விளையாட்டு போட்டிக்கான ஜோதியை பெற்றுக் கொண்ட ஹர்மன்பிரீத் சிங் மற்றும் வீராங்கனை காத்யா கொய்லோ இருவரும் மைதானத்தை வலம் வந்தனர்.
அதன் பிறகு மேடையில் இருந்த பிரதமர். நரேந்திர மோடி அவர்களிடம் தேசிய விளையாட்டு போட்டிக்கான ஜோதியை வழங்கினர். தேசிய விளையாட்டு போட்டிக்கான ஜோதியை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிகள் முறைப்படி தொடங்குகின்றது என்று அறிவித்தார்.
நேற்று(அக்டோபர் 26) தொடங்கிய தேசிய விளையாட்டு போட்டிகளை நவம்பர் மாதம் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த 37வது தேசிய விளையாட்டு போட்டியில் 10000க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று(அக்டோபர்26) வாள்வீச்சு பெட்டிகள் நடைபெற்றது. மகளிருக்கான சைபர் தனிநபர் வாள் வீச்சு போட்டியின் இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சி.ஏ.பவானி தேவி அவர்களும் கேரளாவை சேர்ந்த சவுமியாவும் விளையாடினர்.
இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த சி.ஏ.பவானி தேவி அவர்கள் 15-5 என்ற புள்ளிக் கணக்கில் கேரளாவை சேர்ந்த சவுமியாவை தோற்கடித்தார். இதன் மூலமாக சி.ஏ பவானி தேவி அவர்கள் தங்கப் பதக்கம் வென்றார். சி.ஏ பவானி தேவி அவர்கள் 2022ம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.