இன்று முதல் மூடப்படுகின்றது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

0
137

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தினமும் 120 முகாம் நடத்தி அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சேலம் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சளிப் பரிசோதனை ஏற்பட்டு அந்த முடிவுகள் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிடை உதவி மையம் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து , தடுக்கும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படும் என ஆட்சியர் சி.அ.ராமன் அலுவலகத்தை மூடக்கோரி உத்தரவிட்டார்.

Previous articleசீனியர் சிட்டிசன்களுக்கு இவ்வளவு வரி சலுகையா?
Next articleவாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!