சேலம் மாவட்டத்தில் நான்கு லட்சம் பண மோசடி! அரசு வேலை கனவாகிய நிலை!
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜெகநாதன் இவருடைய மகன் சதீஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக சதீஷ் வேலை பார்த்து வந்தார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு கொங்கனாபுரத்தை சேர்ந்த சண்முகம்(58) என்பவருக்கும் ஜெகநாதன் மூலம் அவருடைய மகனும் அறிமுகமானார்.
அப்போது மீன்வளத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சதீஷ்யிடம் இருந்து சண்முகம் ரூம் 4 லட்சத்து ஐம்பதாயிரம் பெற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை இது தொடர்பாக சங்ககிரி துணைபோலீசார் சுப்ரீம் ஆரோக்கியராஜிடம் சதீஷ் புகார் கொடுத்தார்.
மேலும் சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை அழைத்து துணை போலீஸ் சுப்ரீம் விசாரணை நடத்தினார் அப்போது அவர் சதீசுக்கு ஐம்பதாயிரம் கொடுத்துவிட்டதாகவும் மீத உள்ள பணத்தை பத்து நாட்களில் கொடுத்து விடுவதாகவும் சண்முகம் தெரிவித்தார். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் சதீஷ்க்கு பணம் அவர் கொடுக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது தர முடியாது என்றும் கூறினார்.
மேலும் அதனைத் தொடர்ந்து கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காலத்திலும் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.