சேலம் மாவட்டததினர் இதனை மீறியதால் ரூ 17 லட்சம் அபராதம்! மக்களே உஷார்!
சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பகுதியான கலெக்டர் ஆபீஸ் ,5 ரோடு நான்கு பகுதிகளில் வரத்து போலீசார் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விதியை மீறிய காரணத்தால் 17 ஆயிரம் பேரிடம் மொத்தம் ரூ 17 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறித்து போலீஸ் கமிஷனர் மாடசாமி சில தகவல் கூறியுள்ளார். அதில் மொப்பட் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இந்த வழிமுறையை பின்பற்றாதவர்களை கவனிக்க சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு தீவிர ஈடுபட்டு வருகின்றனர். அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை சாமியானா பந்தலில் அமர வைத்து அறிவுரை கூறி வருகின்றனர். அணியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில தகவல்களை ஒலி பெருக்கியின் மூலம் போலீசார் கூறி வருகின்றனர். மக்கள் அனைவரும் கட்டாயமாக போக்குவரத்து விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் .