சேலம் எஸ்பியின் மிரட்டல் எச்சரிக்கை! இவர்களுக்கு போக்சோ மட்டுமல்ல குண்டர் சட்டமும் !
சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. அபினவ் கடந்த இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்தார்.அப்போது எஸ்பி கூறியதாவது,சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த காவல்துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.இந்த ஊரடங்கு காலங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ,மதுபானங்கள் கடத்தப்படுவது அதிகமாக உள்ளது. கள்ள சாராயம் காய்ச்சுவது மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வது போன்றவற்றை தடைசெய்ய நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றோம்.அதேபோல சேலத்தில் உருட்டு குமார், இளங்கோ, மகேந்திரன், ரஞ்சித் குமார், பெரியசாமி ,ஆகிய ரவுடிகளை தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கரோனா காலகட்டத்தின் மது விற்பனை இல்லாததால் கள்ள சாராயம் காய்ச்சுதல் அதிகமாகி உள்ளது.அதனை கண்டுபிடிக்க பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல பிளாக்கில் மதுபானங்கள் விற்க பயன்படுத்தும் வாகனங்களையும் கண்டறிந்து பறிமுதல் செய்து வைத்துள்ளோம்.இதுவரை முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 58 மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது.
இம் மனுக்களில் கூறியுள்ள கோரிக்கைகளை கவனித்து அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்..அதனையடுத்து அனுமதியின்றி துப்பாக்கிகள் யாரேனும் வைத்திருந்தால் இந்த ஒரு வார காலத்திற்குள் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.அவ்வாறு ஒப்படைப்பார் மீது எந்தவித வழக்கும் மற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் கூறினார். நாங்களாகவே யார் இடத்திலாவது கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண்கள் நலன் கருதி பெண்கள் உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த மையங்கள் வாயிலாக தற்போது வரை 21 மனுக்கள் பெறப்பட்டு இருக்கின்றது.இதில் 15 மனுக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது.பெண்கள் உதவி மையத்தில் பெண்கள் மனு கொடுக்குமாயின், வேறு ஒரு துறையை சார்ந்த வழக்கு என்றாலும் அவர்களை திருப்பி அனுப்பாமல் மனுக்களை பெற்றுக் கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்.
18 வயதுக்கும் குறைவாக உள்ள சிறுமிகளை காதலிப்பதாக கூறி ஏமாற்றும் இளைஞர்களின் மேல் போக்சோ வழக்கு பதிவு செய்யப்படும். அவ்வாறு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர் மீது குண்டர் சட்டமும் அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். சேலத்தில் நடக்கும் குற்றங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் 165 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல கூடியவிரைவில் இ- பீட் முறையை செயல்படுத்துவதாக கூறினார்.