நாய்க்கு சேல்ஸ்மேன் வேலையா..!!

0
58

தெரு நாயை சேல்ஸ்மேனாக மாற்றிய ஹூண்டாய் கார் ஷோரூம்.

பிரேசிலில் ஹுண்டாய் கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இந்த ஷோரூம் அருகே டக்சன் பிரைம் என்று ஒரு தெரு நாய் வசித்து வந்துள்ளது. இந்த ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நாயுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து டக்சன் பிரைம் ஷோரூமிற்குள் போக தொடங்கியது.

இதனைப் பார்த்த ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டக்சன் பிரைம் நாயை சேல்ஸ்மேனகா மாற்றியுள்ளனர். இந்த நாய்க்கு தனியாக அடையாள அட்டை வழக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடைபெறும் மீட்டிங்கிலும் கலந்து கொண்டு அங்குள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்பொழுது இந்த நாயின் புகைப்படங்கள் சமூகவளைதளத்தில் வைரலாகி வருகிறது.

https://instagram.com/tucson_prime?igshid=10curcb2swpem

அத்தோடு இந்த டக்சன் பிரைம் நாய்க்கு தனியாக இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது அதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்த பக்கத்தை பா‌‌லோ செய்கிறார்கள். மேலும், டக்சன் பிரைமின் புகைப்படங்களை அதில் பதிவு செய்தவுடனே 7,000 லைக்குகள் மேல் பெறுகிறது.

author avatar
Parthipan K