மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்..

Photo of author

By Parthipan K

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்..

Parthipan K

Salon shop worker killed near Mecheri!! Tragedy due to addiction..

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்..

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகேவுள்ள  அழகா கவுண்டனூரில் உள்ள அரசு மதுபான கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த கிடப்பதாக போலீசாருக்கு அவ்வூர் மக்கள் தகவல் கொடுத்தனர்.

இச்செய்தியை கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சடலத்தை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சலூன் கடையில் வேலை பார்த்து வந்த சிவக்குமார் வயது 40 என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியேறியவர் அருகிலுள்ள  அரசு மதுபான கடையில் நண்பர்களுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இச்சம்பவம் நடந்தது என போலீசார் தெரிவித்தனர்.இந்நிலையில் சலூன் தொழிலாளர் உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில்பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.