விவாகரத்திற்கு பிறகு கோயில், கோயிலாக சுற்றும் சமந்தா காரணம் இதுதானா.!!

Photo of author

By Vijay

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இவருடைய விவாகரத்துக்கு பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இருந்தபோதிலும், விவாகரத்துக்கு சமந்தா தான் காரணம் என்றும் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார். என்றும் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என்றும் அவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது போன்ற எதிர்மறையான சூழலிலிருந்து விலககும் விதமாக சமந்தா திரைப்படங்களில் மறுபடியும் நடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக அவர் வெளியில் எங்கும் சென்றதாக தெரியவில்லை அது குறித்த புகைப்படங்களோ, தகவல்களோ எதுவும் வெளியாகவில்லை.

இதனையடுத்து தற்போது மன அமைதி வேண்டி நடிகை சமந்தா தனி ஹெலிகாப்டரில் ஆன்மீக சுற்றுலா செய்து வருகிறார். இதில், முதல் பயணமாக தனது ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டியுடன் சேர்ந்து இமயமலை அருகில் உள்ள உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷிற்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்‌.

அங்குள்ள சாமியார்களிடம் பூஜையில் கலந்துகொண்ட வீடியோ, புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பூஜையில் ஈடுபட்டுள்ள நடிகை சமந்தாவின் புகைப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CVVF3XUoq4J/?utm_medium=copy_link