விவாகரத்து விவகாரம்.. மானநஷ்ட வழக்கை பதிவு செய்த சமந்தா.!!

Photo of author

By Vijay

யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா தன்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்பியதாக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தனது கணவராண நாக சைதன்யாவை விவாகரத்து செய்தாக சமந்தா அறிவித்திருந்தார். நாக சைதன்யாவும் இதே அறிக்கையைப் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து, சமந்தா விவாகரத்துக்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன.

இதையடுத்து தனது தனிப்பட்ட விசயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், இதன்மூலம் எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை பாதிக்காது என்றும் அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருந்தார்.

எனவே, தன்னைப் பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்பியதாக மேலும் சுமன் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீதும் சமந்தா வழக்கு தொடர்ந்துள்ளார் என தகவல்கள் பரபரப்பாக வெளியாகி உள்ளது .

மேலும், வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் தனது திருமண வாழ்க்கையை பற்றியும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தவறாகப் பேசியிருக்கிறார் என அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.