வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

0
70

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகை சமந்தா கடந்த சில வாரங்களாக சமூகவலைதளங்களில் புகைப்படம் எதுவும் பகிராமல் இருந்து வந்தார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. அதையடுத்து திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திய சமந்தா கவர்ச்சியான வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அதே போல சமூகவலைதளங்களிலும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வந்தார்.

இப்படி சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆர்வமாக இயங்கி வந்த சமந்தா திடீரென்று தன்னுடைய புகைப்படங்கள் எதையும் பதிவேற்றவில்லை. இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே தோல் சம்மந்தமாக சில பிரச்சனைகள் இருந்த நிலையில் இப்போதும் அந்த பிரச்சனையால்தான் ஷோசியல் மீடியாவில் புகைப்படங்களைப் பதிவேற்ற வில்லை என்று வதந்திகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் அந்த வதந்திகளைப் பொய்யாக்கும் விதமாக கருப்பு நிற டி ஷர்ட் அணிந்து சமந்தா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த புகைப்படத்திலும் அவர் முகம் முழுவதும் தெரியாமல் பாதி மட்டுமே தெரிவது போல அமைந்துள்ளது.