துணிவு ரிலீஸ் எப்போதுன்னு ரசிகர்களே அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்!

0
280

துணிவு ரிலீஸ் எப்போதுன்னு ரசிகர்களே அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்!

அஜித்தின் துணிவு திரைப்படம் இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து படத்தின் தலைப்பு உள்ளிட்ட எந்தவொரு அப்டேட்டும் வெளியாக வில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் டைட்டில் ‘துணிவு’ என்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக அஜித்தின் பட பெயர்கள் வீரம், விவேகம், வலிமை என வைக்கப்பட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட அதே பொருள் கொண்ட துணிவு என்ற டைட்டில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் பாங்காங்கில் நடந்து வருகிறது. விரைவில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது ரசிகர்களே சேர்ந்து அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என போஸ்டர் அடித்து ஒட்டி இருப்பது சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஓபிஎஸ் மகனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காத்திருக்கும் ஆபத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி!
Next articleவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here