சமந்தா நடிக்கும் சகுந்தலம் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு… ஓ இதுதான் காரணமா?

Photo of author

By Vinoth

சமந்தா நடிக்கும் சகுந்தலம் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு… ஓ இதுதான் காரணமா?

Vinoth

சமந்தா நடிக்கும் சகுந்தலம் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு… ஓ இதுதான் காரணமா?

நடிகை சமந்தா சகுந்தலம் என்ற பேன் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. அதையடுத்து திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இதையடுத்து தற்போது அவர் சினிமாவில் மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் யசோதா மற்றும் ஷகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் அடுத்து ரிலீஸூக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஷகுந்தலம் திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் மாற்றுவதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும், அதனால் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அடுத்த அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில் சமந்தா தோல் சம்மந்தமான அலர்ஜி பிரச்சனையால் அவதிப்படுவதாகவும், அதனால்தான் கடந்த சில வாரங்களாக சமூகவலைதளங்களில் கூட அவர் ஆக்டிவ்வாக இல்லாமல் இருக்கிறார் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன.