“பிரிவதை தவிர வேறு வழியில்லை… இப்போது வலிமையாக உணர்கிறேன்…” விவாகரத்து குறித்து சமந்தா

0
142

“பிரிவதை தவிர வேறு வழியில்லை… இப்போது வலிமையாக உணர்கிறேன்…” விவாகரத்து குறித்து சமந்தா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது.

அதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்காண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த விவாகரத்துக்கு காரணம் என்று பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் வேண்டிக்கொண்டனர்.

இந்நிலையில் விவாகரத்துக்குப் பின் நடிப்பில் பிஸியாகியுள்ள சமந்தா வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட்டின் பிரபல ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது தன்னுடைய விவாகரத்து மற்றும் அதன் பின்னான வாழ்க்கை குறித்து பேசிய அவர் “ திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் இல்லை என்றால் பிரிவதை தவிர வேறு வழியில்லை.  கூர்மையான பொருட்கள் மறைந்திருக்கும் ஒரு அறைக்குள் இருவரும் இருப்பது போன்று இருந்தது. முதலில் இந்த முடிவு கடினமாக இருந்தாலும் சரியானதாக இருந்தது.  இப்போது இயல்பு நிலையை எட்டியுள்ளேன். மேலும் வலிமையாக இருப்பதாகவும் உணர்கிறேன். ” எனக் கூறியுள்ளார்.

Previous articleஅடுத்த படமும் ஓடிடியிலா?… சூர்யாவின் ‘வணங்கான்’ பற்றி பரவும் தகவல்!
Next articleஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!..