விவாகரத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த சமந்தா

Photo of author

By Parthipan K

நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைத்தன்யாவும் சில தினங்களுக்கு முன்பு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.

அதன் பிறகு அவர்களது விவாகாரத்திற்கான காரணம் இதுவாக இருக்கும் அதுவாக இருக்கும் என நாளுக்கு நாள் பல காரணங்களை யூகங்களாக அடுக்கி கொண்டே இருக்கின்றனர்.

நாகசைதன்யாவுக்கும் சமீபத்தில் அவருடன் நடித்த சாய்பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளது எனவும், சமந்தா நடித்த பேமிலி மேன் வெப் சீரிஸ் தான் காரணம் என்றும் வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது விவாகரத்தை பற்றி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சமந்தா கூறியிருப்பதாவது,

https://twitter.com/Samanthaprabhu2/status/1446418402805837825/photo/1

என் விவாகரத்து செய்தியை கேட்டு எனக்காக நீங்கள் கலங்கினார்கள், என் மீது அக்கறை காட்டுகிறீர்கள், என் மீது கூறப்படும் பொய் வதந்திகளை எதிர்க்கிறீர்கள் அதற்கு நான் நன்றி கூறுகிறேன்.

சிலர் நான் வேறொருவர் கூட உறவில் இருப்பதாகவும், நான் குழந்தை வேண்டாம் என்று இருந்ததாகவும் மேலும் நான் கருக்கலைப்பு செய்தேன் என்று கூட வதந்திகள் பரப்புகிறார்கள்.

விவாகரத்து என்பதே மிகவும் கொடுமையான வலி, நான் இந்த வலியிலிருந்து வெளிவர விடுங்கள், அதை விட்டு விட்டு என் மீது இந்த வீண்பழி போடுவது கொடுமையானது, ஆனால் நான் சத்தியமாக கூறுகிறேன் இதை போன்ற விஷயங்கள் ஒரு போதும் உடைக்காது”

என்று எழுதி சமந்தா என்று இறுதியில் கையெழுத்திட்டுள்ளார்