தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் மழை.!!-வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

0
201

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் அக்டோபர் 10ஆம் தேதி கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, பெரம்பலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன் காரணமாக, மழை பெய்யும்போது டிவி, போன், மிக்ஸி மற்றும் கணினி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஈரமான கைகளுடன் மின்சார சுவிட்ச் மற்றும் விளக்குகளை இயக்க வேண்டாம் அறுந்து கிடக்கும் மின்சார கம்பி அருகில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous articleவரப்போகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2! சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறொரு ஹீரோ! 
Next articleவிவாகரத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த சமந்தா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here