முடியை வெட்டி ஆளே மாறிய சமந்தா!! டாம் பாய் லுக்கில் பார்த்து வியந்து போன ரசிகர்கள்!!

முடியை வெட்டி ஆளே மாறிய சமந்தா!! டாம் பாய் லுக்கில் பார்த்து வியந்து போன ரசிகர்கள்!!

சமந்தா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் குஷி. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது.

சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி  நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்த பல மாதங்களுக்கு பிறகு மீண்டு வந்தார்.

அவர் பதிக்க பட்டிருத்த அந்த ஓராண்டு கால இடைவெளியில் எந்த ஒரு புதிய படத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தார்.அதன் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து நடிக்க தொடங்கினார்.

உடல்நிலை முழுமையாக குணமடையாத காரணத்தால் தான் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து முன்பணம் வாங்கிய நிலையில் தற்பொழுது  அனைத்தையும் திருப்பி கொடுத்துள்ளார்.

மேலும் சில நாட்களாகவே கோவில்களுக்கு செல்வதும் இயற்கையுடன் ஒன்றி இருப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது சமந்தா அவரகள் ஈஷா யோகா கோவிலில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.

மேலும் ஓய்வு நிலையில் உள்ள சமந்தா தொடர் சிகிச்சைக்கா அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு செல்ல உள்ளார்.

இந்த நிலையில் சமந்தா தனது முடியை வெட்டிக்கொண்டு புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறி உள்ளார். டாம் பாய் கெட்டப்புக்கு மாறி இருக்கும் சமந்தா தற்பொழுது அந்த லுக்கில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளார்.