வசூலில் சாதிக்கும் சமந்தாவின் யசோதா படம்!நேற்று வசூல் கோடிகளில் புரண்டது!

Photo of author

By Vijay

வசூலில் சாதிக்கும் சமந்தாவின் யசோதா படம்!நேற்று வசூல் கோடிகளில் புரண்டது!

சமந்தா மற்றும் வரலட்சுமியும் இணைந்து நடித்து இருக்கும் படம் யாசோதா. ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில்  கடந்த 11ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.இந்த படம் சமந்தாவிற்கு முதல் பான் இந்திய படமாகும்.

 இந்த படம் தமிழ்,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில்  தயாரிக்கப்பட்டு உலகமுழுவதும்  ரிலீஸானது. இந்த படம்  மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.

 யசோதா இந்தியா மற்றும் அமெரிக்காவில் வசூல் பட்டைய கிளப்புகிறது.நேற்று மட்டும் அமெரிக்காவில் 400000 டாலர்களுக்கு வசூல் மற்றும் இந்தியாவில் நேற்று மட்டும் ரூ.3.50 கோடி வசூலித்து இருக்கிறது.

யசோதா படம் ரிலீஸான  சிலமணி நேரத்தில் தமிழகத்தின் சினிமா மாபியா என்று அழைக்கப்படும் தமிழ் ராக்கர்ஸ்  படத்தை வெளியிட்டது.

ஆனாலும் சமந்தா ரசிகர்கள் திரையரங்கம் சென்றுதான் பார்போம் என்ற முடிவில் இருந்தனர்.ரசிகர்களிடம் காரணம் கேட்டபோது  மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதை பொருட்படுத்தாமல் யசோதா படத்தில் நடித்ததாகவும்.

அந்த  காரணத்திற்காக திரையரங்கம் சென்று பார்போம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அவருக்கு மயோசிடிஸ் இருப்பதை படக்குழுவிடம் சொல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

 பின்னர் அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட போது தான் படக்குழுவுக்கே தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.