விஜய் சேதுபதி படத்தில் இருந்து நாசூக்காக கழண்டுகொண்ட சன் பிக்சர்ஸ்… பின்னணி இதுதானா?

0
90

விஜய் சேதுபதி படத்தில் இருந்து நாசூக்காக கழண்டுகொண்ட சன் பிக்சர்ஸ்… பின்னணி இதுதானா?

நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இயக்குனர் பொன்ராமுக்கு மிகப்பெரிய பங்குண்டு. சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம் அதே கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து பொன்ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது.

அதையடுத்து இப்போது விஜய் சேதுபதியின் 46 ஆவது படமான DSP படத்தை பொன்ராம் இயக்கி முடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பைனான்ஸில் கார்த்திக் சுப்பராஜின் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

ஆனால் சமீபத்தில் வெளியான போஸ்டரில் சன் பிக்சர்ஸின் பெயரே இடம்பெறவில்லை. அதற்குக் காரணம் என்ன என்பது தற்பொது வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்  அவர்களுக்கு பிடிக்காத காரணத்தால் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமே தயாரிப்பதாக இருக்கட்டும் என விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு குறையத் தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.