Cricket: எம் எஸ் தோனியை தொடர்ந்து கே எல் ராகுலுக்கும் நடந்த ஒரே சம்பவம். மனசாட்சி இல்லாத LSG உரிமையாளர்.
2025 ல் நடக்கவிருக்கும் ஐ பி எல் போட்டியின் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட அக்டோபர் 31 தேதியை நிர்ணயித்தது பிசிசிஐ.
அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் வீரர் பட்டியலை வெளியிட்டது இதில் ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஸ்ரேயர்ஸ் ஐயர் போன்ற கேப்டன் பதவியில் இருந்த வீரர்கள் விடுவிக்கப்பட்டன இது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2017 ம் ஆண்டு சென்னை அணி தடையில் இருந்த போது எம் எஸ் தோனி புனே அணியின் கேப்டனாக இருந்தார் அப்போது அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அவருக்கும் தோனிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் தொனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினார்.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அடுத்த ஆண்டு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் நிக்கோலஸ் பூரன், ரவி பிஸ்னோய், மயக் யாதவ், ஆயுஷ் பதொனி, மோசின் கான் ஆகிய வீரர்களை தக்க வைத்தது. அணியின் கேப்டனாக இருந்த கே எல் ராகுலை தக்க வைக்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் களத்தில் வைத்து கே எல் ராகுலை LSG அணி உரிமையாளர் வெளுத்து வாங்கினார் இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார் புனே அணியில் எம் எஸ் தோனிக்கு நடந்த அதே நிலைமை தற்போது கே எல் ராகுலுக்கும் நடைபெற்றுள்ளது என்றும் LSG அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கவிற்கு மனசாட்சியே இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.