ஜனவரி 1 முதல் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் ஒரே கால அட்டவணை!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Gayathri

வங்கிக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளுக்கும் கால அட்டவணையை சீரமைக்கும் வகையில் புதிதாக ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது மத்திய பிரதேச மாநில அரசு.

இந்த மாற்றத்தின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வரை ஒரு சில வங்கிகள் காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டாலும் மற்ற சில வங்கிகள் 10:30 மற்றும் 11 மணி அளவில் திறக்கப்பட்டு வந்தது வாடிக்கையாளர்களை குழப்பும் மற்றும் அவர்களுடைய நேரத்தை வீணாக்குவதாக அமைந்ததை அடுத்து இந்த புதிய மாற்றமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

SLBC என்னும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவானது, வாடிக்கையாளர்களுடைய சேவையை எளிதாக்கவும் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதாகவும் அமையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய பிரதேசத்தின் உடைய இந்த முடிவை தொடர்ந்து இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் சிரமம் இல்லாமல், பல மணி நேர காத்திருப்பு இல்லாமல், கூட்ட நெரிசல் இல்லாமல் தங்களுடைய வங்கிப் பணிகளை எளிதாக முடித்து செல்ல முடியும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான அட்டவணையை அமல்படுத்துவது வாடிக்கையாளர் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தலாம் மற்றும் வங்கிச் சேவைகளை சரிப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.