விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி எஸ்23 FE!!! இணையத்தில் லீக்கான புதிய தகவல்கள்!!!

0
148
#image_title

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி எஸ்23 FE!!! இணையத்தில் லீக்கான புதிய தகவல்கள்!!!

விரைவில் அதாவது அடுத்த வாரம் அறிமுகம் ஆகவுள்ள சாம்சங் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்.இ மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக்கானது.

ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்.இ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு மக்கள் மத்தியில் நீண்டகாலமாக எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்.இ மாடலில் வெளியீட்டு தேதி சாம்சங் நிறுவனத்தின் அர்ஜெண்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றது. சமீபத்தில் வெளியான சாம்சங் எஸ்23 எஃப்.இ மாடல் ஸ்மார்ட்போனின் டீசரில் இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று மாதம் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இணையதளத்தில் வெளியீட்டு தேதி லீக் ஆகி இருக்கின்றது.

இருப்பினும் இது உண்மையான வெளியீட்டு தேதியா என்பது சந்தேகத்தை அளிக்கின்றது. இணையத்தில் லீக் ஆன தகவலின் படி சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்.இ மாடல் ஸ்மார்ட்போன் அக்டோபர் 4ம் தேதி அறிமுகமாகவுள்ளது.

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்.இ மாடல் 6.4 இன்ச் AMOLED புல் ஹெச்.டி டிஸ்பிளே, 120 Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1, எக்ஸைனோஸ் 2200 பிராஸசர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி ரோம், 50 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 10 மெகா பிக்சல் செல்பி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆகிய சிறப்பம்சங்கள் இதில் வழங்கப்படுகின்றது.

Previous articleசிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!!
Next articleஇனி சைகை மொழியிலும் வாதாடலாம் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!!!