இனி சைகை மொழியிலும் வாதாடலாம் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!!!

0
25
#image_title

ஒரு நாட்டின் மேம்பாடு என்பது எக்குறையும்  இல்லாதவர்களை மட்டும் முன்னேற்றம் காணவைப்பது அன்று மாற்றுத்திறனாளிகளையும் தன்னோடு முன்னேற்றி செல்வது தான் ஒருநாட்டின் உண்மையான வளர்ச்சியாகும்   அவ்வகையில் நமது நாடு மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வந்துள்ளது.அவ்வகையில் இனி இந்திய உச்ச நீதிமன்றத்தில் காது மற்றும் வாய் பேச முடியாத  மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் இனி சைகை மொழியிலேயே வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுவரை உச்ச  நீதிமன்றங்களில் பங்குபெற்ற மாற்று திறனாளி வழக்குரைஞர்களோடு வாதிடும்போது சத்தம்போட்டு வாதிடவேண்டியிருக்கும் இதனால் நீதிமன்றத்தில் இறைச்சலாக இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்னிலையில் வழக்குரைஞர் சஞ்சிதா அய்ன் ஒரு மாறுபட்ட கருத்தினை முன்வைத்தார்.அக்கருத்து யாதெனில் வழக்குரைஞர் சாராஹ் சன்னி வாதிடும்போது சைகை மொழியில் வாதிட அனுமதிக்குமாறு கூறினார்.அவர் காணொளி அழைப்பு மூலம் வாதிட அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.அக்கோரிக்கையை ஏற்ற டி.ஏ.சந்திரசூட் வழக்குரைஞர் சாரஹ் சன்னி காணொளி அழைப்பு மூலம் வாதிட ஏற்பாடுகள் செய்யப்பட்டது

பிறகு செவித்திறன் மற்றுத்திறனாளி சாராஹ் அவர்கள் காணொளி அழைப்பில் சைகை மொழியில் வாதிட்டது எழுத்து பூர்வமாக மாற்றப்பட்டது.எதிர் தரப்பு வாதங்களும் செய்கை மொழியில் அவருக்கு மொழி பெயர்க்கப்பட்டு சொல்லப்பட்டது.இதனால் வாதிடும் நேரம் அதிகமாகும் என நினைத்திருந்த நிலையில் வாதிடும் நேரம்  விரைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.நீதிபதி வழக்கு விசாரணை நேரம் விரைவாக இருந்ததாகவும் மகிழ்ச்சியடைந்தார்.

author avatar
Preethi