உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!

0
139

மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு, ஆறு யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் ரூபாய் 40,000 முதல் 60,000 வரை விற்கப்பட்டு வந்தது .இதனையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்மாய், ஆறு, ஓடை ஆகிய பகுதிகளில் மற்றும் அருகில் உள்ள தனியார் நிலங்களில் உபரி மண் அள்ள அனுமதி பெற்று மணல் கடத்தி வருகின்றனர். இந்நிலையில், தென் மாவட்டங்களில் மணல் கொள்ளை குறித்து மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் அதிர்ச்சியடைந்தது..மேலும், சிவகங்கை மாவட்டத்தில் உபரி மண் அல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.

இதனைத்தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு செய்களத்தூர் பகுதியில், செயல்பட்டு வந்த குவாரி ஒன்றில் மணல் அள்ளிய 13 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் .மேலும் ,இது தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக திருப்பத்தூர் திமுக ஒன்றிய குழு தலைவரான சண்முகவடிவேல் அவர்கள் மீது திருக்கோஷ்டியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால், வழக்குப்பதிவு செய்தும்,அவரை கைது செய்ததால் அந்த இன்ஸ்பெக்டர் ஜெர்மனியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இருப்பினும் சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளையானது குறையவில்லை. மானாமதுரை அருகே கல்குறிச்சியில் வைகை ஆற்றில் மோட்டார் சைக்கிள் மூலம் அள்ளி மணல் கடத்தியதாகவும், பின்னர் லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ,உயர் நீதிமன்றம் மணல் அள்ள தடை விதித்த போதிலும் மணல் கொள்ளையானது தொடர்ந்து நடைபெற்று வருவதால், சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous article48 வயதில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை கலங்கவைத்த சிம்புவின் மன்மதன் பட நடிகை!
Next articleசேலம்: “மண்கொத்தியே வருக”வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் பறவை ஆர்வலர்கள்!