தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் செம்மண், மணல், கல் குவாரிகள்!

தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் செம்மண், மணல், கல் குவாரிகள்!
தேனி மாவட்டத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.குச்சனூர் சங்கராபுரம் சாலையில் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக இரவு பகல் பாராமல் ஜேசிபி ஹிட்டாச்சி உள்ளிட்ட அதிநவீன வாகனங்கள் மூலமாக அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் வெட்டி எடுக்கப்பட்டு தினந்தோறும் கடத்தப்படுகிறதுஇதேபோல் பொட்டிபுரம், கணேசபுரம்,சிலமலை, பகுதியில் அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது.
கோடாங்கி பட்டி பகுதியில் உள்ள கல் குவாரியில், ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கல் குவாரிகளில் அதிக அளவில் வெடிவைத்து கனிம வளங்கள் வெளி மாநிலத்திற்கு கடத்தி கொள்ளை அடிக்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment