எந்தே மாறி! அந்தே மாறி! Sandy Master நடித்து வெளிவந்த பாடல் இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!

Photo of author

By Kowsalya

சாண்டி திரைப்பட நடன ஆசிரியர். இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன ஆசிரியராகவும், மேடை நடனங்களையும் தொகுத்து வந்துள்ளார். இவர் திரைத்துறையில் நடன ஆசிரியரான கலா மாஸ்டரிடம் மாணவனாக ஆகா அறிமுகமான இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் உதவியோடு ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்களித்து வருகிறார்.
2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்று அனைவரிடத்திலும் நல்ல பெயர் பெற்றார். அவர் அந்த வீட்டில் செய்த காமெடிக்கு big boss நிகழ்ச்சி பார்க்க வந்தவர்கள் அதிகம்.

அந்த நிகழ்ச்சியில் சாண்டி, கவின், தர்ஷன், முகின் ஆகியோர் சேர்ந்து பாடிய We Are The Boys பாடல் மிகவும் பேசப்பட்டது.

சோஷியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் சாண்டி மாஸ்டர் மற்றும் பாலன் காஷ் என்பவர் GOYALEH என்ற பாடலை பாடி வெளியிட்டுள்ளனர். சாண்டி மாஸ்டர் சொந்தமாக எழுதி பாடி நடித்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பரவி உள்ளது.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வீடியோவை பாருங்கள்!