கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சாண்டி மாஸ்டர்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

0
144

கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சாண்டி மாஸ்டர்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

 

நடன இயக்குநராக இருக்கும் சாண்டி மாஸ்டர் அவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

 

நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் ஆகிய சினிமா துறைகளிலும் முன்னணி நடன இயக்குநராக உள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மேலும் பிரபலமடைந்த சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் இவர் நடனம் இயக்கும் சில பாடல்களில் அவ்வப்போது தோன்றி இருப்பார். நடிகர் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் இவர் வந்திருப்பார். மேலும் நடிகர் சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றிலும் வந்திருப்பார்.

 

இதற்கு மத்தியில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நடிப்பதன் மூலமாக நடிகராக அறிமுகமாகவுள்ளார். இதையடுத்து நடிகராக அறிமுகமாகும் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகம் ஆகப்போகிறார்.

 

நேரம், பிரேமம், கோல்ட் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்தியன் இயக்கும் படத்தில் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு கிப்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. கிப்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாக அந்த டைட்டில் லுக் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கிப்ட் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டு சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் அவர்கள் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அவர்களுக்கும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய காலத்தில் இயக்குநர் கதாநாயகனாக அறிமுகம் ஆவது, தயாரிப்பாளர் கதாநாயகனாக அறிமுகம் ஆவது, நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாக அறிமுகம் ஆவது, வில்லன் நடிகர்கள் கதாநாயகனாக அறிமுகம் ஆவது போல தற்போது நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் அவர்களும் கதாநாயகனாக அறிமுகம் ஆகவுள்ளார். பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் மஞ்சள் வீரன் படம் மூலமாக  கதாநாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleகாய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!
Next article13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!!