சனிக்கவசம்., சனி பாதிப்புகள் அனைத்தும் நீங்க இதை செய்தாலே போதும்!!

0
254

நவக்கிரகங்களில் நியாயத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்டவர் தான் சனி பகவான். சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒரு தனி மரியாதைதான். அவர் கெடுதல்களை அளித்தாலும் சனி கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க இயலாது என்பதே உண்மை. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் திடுக்கென அனைத்தையும் மாற்றும் சக்தியும் இதற்கு உண்டு.

கர்மவினை தீர்ப்பவராக விளங்கும் சனி பகவான் கொடுக்கும் இன்னல்களிலிருந்து விடுபட நாம் சொல்ல வேண்டிய ஒரு கவசம்தான் சனி கவசம். இந்த கவசத்தை மனமுருகி செய்பவர்களுக்கு சனி பாதிப்புகள் நிச்சயம் குறையும் என்பது நம்பிக்கை. இந்த கவசத்தை அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, சனி திசை நடப்பவர்கள் ஆகியோர் சனிக்கிழமைகளில் சனிபகவான் சன்னதிக்கு சென்று தீபங்களை ஏற்றி அமைதியாக அமர்ந்து மனமுருகி பாடலாக பாடி அவரை மகிழ்விக்க வேண்டும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்கள் செய்து வர சனி பகவான் உங்களுக்கு கொடுக்கும் துன்பங்கள் நீங்கி, நல்ல கர்மவினைக்கு ஏற்ப நீங்கள் எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு நல்லது செய்வார். நவகிரகங்களில் எந்த ஒரு கிரகதத்துக்கும் இல்லாத ஈஸ்வரப்பட்டம் சனீஸ்வரர் ஒருவருக்கே அமைந்துள்ளது. எந்த ஒரு கடவுள் வரத்தை அளித்தாலும், அதனை மற்றவர்கள் தடுத்துவிட முடியும்.

ஆனால், சனி கொடுக்கும் வரத்தை யாராலும் தடுக்க இயலாது. சனி பகவானை முழுவதுமாக சரணடைந்தவர்களுக்கு வாழ்வில் துன்பங்களும் இல்லை என்பதே உண்மை. எனவே, அனைவரும் சனி கவசத்தையும் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பாராயணம் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

Previous articleஉத்தரப் பிரதேசத்தில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!! மக்கள் தொகை மசோதா உத்தரவு!!
Next articleஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!