பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் கட்டாயமாக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

0
294
#image_title

கேரளாவில் பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் என கேரள முதல்வர் அறிவிதுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் எனவும் பள்ளிகளில் நாப்கின் அகற்றும் முறையும் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிகளில் இந்த வசதியை பொதுக் கல்வித் துறை வழங்கும் எனவும் ‘குப்பையில்லா கேரளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 26, 2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் பெண்கள் அதிக நம்பிக்கையுடன் வளரட்டும் எனவும் மாதவிடாய் ஒரு பாவம் என்ற புனையப்பட்ட பொது அறிவை வெல்லட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து!!
Next articleமுதல்வர் பதவிக்கு நானும் தகுதியானவன் தான்-முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரன்!