முதல்வர் பதவிக்கு நானும் தகுதியானவன் தான்-முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரன்!

0
171
#image_title

நானும் முதல்வர் பதவிக்கு தகுதியானவன் தான்.என்னிடம் கொடுத்தால் நிரூபித்து காட்டுவேன்.முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை.

கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற போட்டி அதிகரித்துள்ள நிலையில், ஆட்சியை நடத்துமாறு கட்சி மேலிடம் கேட்டால் தான் பொறுப்பேற்க தயாராக உள்ளதாக அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறியிருப்பது கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பதவிக்கு இவரும் ஆசைப்படுகிறார் என்பதை காட்டி இருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து என்னை முதல்வர் ஆக்கினால், நான் அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கிறேன். கட்சியின் தலைமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கு சில கொள்கைகள் உள்ளன. நானும் 50 சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு கூச்சல் போடலாம். ஆனால் எனக்கு கட்சியின் ஒழுக்கம்தான் முக்கியம். எங்களைப் போன்றவர்கள் கடைப்பிடிக்காவிட்டால் கட்சியில் ஒழுக்கம் இருக்காது.

அதே நேரத்தில் தலைமை என்னிடம் முதல்வர் பொறுப்பினை கொடுத்தால் நான் மாட்டேன் என்று சொல்லமாட்டேன். நான் கட்சிக்காக உழைத்து எட்டு ஆண்டுகள் கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி 2013ல் காங்கிரஸை ஆட்சிக்குக் கொண்டு வந்தேன் என்பதை தலைமையில் உள்ளோர் அறிவார்கள். துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளேன். அவர்களுக்கு எல்லாம் தெரியும், நாம் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை.

அதனால் நான் பதவியை கேட்கவோ அல்லது லாபி செய்யவோ தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் அமைதியாக இருக்கிறேன். அதனால் நான் திறமையற்றவன் என்று அர்த்தம் இல்லை. நான் திறமையானவன். வாய்ப்பு கிடைத்தால் அந்த வேலையை சிறப்பாக செய்வேன் என்றும் பேசியுள்ளார்.

author avatar
Savitha