விஜய் டிவியை விட்டு விலகி சன் டிவிக்கு சென்ற முக்கிய பிரபலம்.! யார் என்று தெரியுமா?!

Photo of author

By Jayachithra

விஜய் டிவியை விட்டு விலகி சன் டிவிக்கு சென்ற முக்கிய பிரபலம்.! யார் என்று தெரியுமா?!

Jayachithra

Updated on:

கோலிவுட்டில் இங்கிலீஷ் படம், குளிர் 100 டிகிரி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் தான் சஞ்சீவ். இவரது வெள்ளி திரைப்படங்கள் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை. எனவே, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் ஹீரோவாக நடித்தார்.

சஞ்சீவ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், அந்த சீரியலில் இவருக்கு கதாநாயகியாக நடித்த செம்பா என்ற கதாபாத்திரத்தில் இருந்த ஆலியா மானசாவை இவர் திருமணம் செய்து கொண்டார்.

அத்துடன் இவருக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.ராஜா ராணி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்ற தொடரிலும் அவர் நடித்தார். ஆனால், இந்த சீரியல் அவருக்கு பெரும் அளவு வெற்றியை அளிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது இவர் சன்டிவி பக்கம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியி மிகப்பெரிய சம்பளம் கொடுத்து சஞ்சீவை புதிய சீரியலில் ஒன்றில் கமிட் செய்து உள்ளது. இந்த சீரியல் தினமும் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் என்று சஞ்சீவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதன் மூலம் ரசிகர்கள் அவருடைய சீரியல் எப்பொழுது தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.மேலும் விஜய் டிவியை விட்டு விட்டு எதற்காக சன் டிவிக்கு வருகிறீர்கள் என்ற கேள்வியையம் எழுப்பி வருகின்றனர்.