இந்திய அணி மூத்த வீரர்கள் அடுத்ததாக ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க உடனான டி 20 தொடரில் விளையாட உள்ளது. இது குறித்து சஞ்சு சாம்சன் பேட்டிங் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் அணில் கும்ப்ளே.
இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் தென்னாபிரிக்க உடன் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த அணியில் சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), அபிஷேக் சர்மா , சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் , ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், விஜயகுமார் வைஷாக் , அவேஷ் கான் , யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடரின் முதல் போட்டியானது நாளை தொடங்கவுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே சஞ்சு சாம்சன் பேட்டிங் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடினார்.
அவர் ஆட்டத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் களமிறங்கினால் நிச்சயம் நன்றாக விளையாடுவார். ஆனால் அவரின் பேட்டிங் அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை இதுதான் கொஞ்சம் சிக்கலான ஒன்று. ஆனால் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார். இதுவரை 33 டி 20 போட்டிகளில் விளையாடி இவரி 594 ரன்கள் அடித்துள்ளார்.