ட்விட்டரில் கிக் பட ட்ரெய்லரை வெளியிட்ட சந்தானம்!!

0
223

ட்விட்டரில் கிக் பட ட்ரெய்லரை வெளியிட்ட சந்தானம்!!

தமிழ் திரையுலகில் முன்னனி நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சந்தானம்.இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இவர் ‘அறை எண் 305ல் கடவுள்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இதனை தொடர்ந்து நீண்ட காலத்திற்கு பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,தில்லுக்கு துட்டு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களின் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் குலுகுலு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம்.கடந்த 2022 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் இவருக்கு இவை தோல்வி படங்களாக அமைந்தது.இதனை தொடர்ந்து சந்தானம் அவர்கள் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘DD Returns’ என்ற படத்தில் நடித்தார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்திருந்தார்.கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து தற்பொழுது திரையரங்குகளில் வெற்றி கரகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது

இந்நிலையில் தற்பொழுது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ திரைப்படத்தை பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.இவர் கன்னடத்தில் லவ்குரு,கானா பஜானா , விசில்,ஆரெஞ்ச் போன்ற ஹிட் படங்களை இயக்கி பிரபல இயக்குநராக வலம் வருகிறார். ஃபார்டியூன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்து சுதாகர்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘தான்யா ஹோப்’ நடித்துள்ளார்.இவர் தமிழில் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர்களை தவிர்த்து தம்பி ராமையா,பிரமானந்தம், செந்தில்,கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா,Y.G.மகேந்திரன்,மொட்டை ராஜேந்திரன்,வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா,கிரேன் மனோகர்,கிங்காங்,கூல் சுரேஷ்,சேது,அந்தோணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி சந்தானத்தின்பிறந்த நாளன்று இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில் அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து ‘கிக்’ படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை சந்தானம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இவை தற்பொழுது இணையத்தில் வேகமான பரவி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.இந்நிலையில் தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபோக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி!! இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!!
Next article30 ஆயிரம் ஆவின் பால் அட்டைகளை ரத்து செய்து அதிரடி காட்டிய அதிகாரிகள்!!